இந்தியா

குதிரை பேரம் பேசிய வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவரிடமும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக நேற்று, இவர்களிடம் சுமார் இரண்டரை மணி நேரம் திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த முறைகேடு மற்றும் குதிரை பேரம் தொடர்பான பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதால், அரசியல் களத்தில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்