சினிமா

20 to 28 கோடி!.. சம்பளத்தை உயர்த்திய அனிருத்!.. இது எங்க போய் முடியுமோ?..

துவக்கத்தில் தனுஷின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அனிருத் இசையமைத்து வந்தார். தனுஷும், அனிருத்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷும் அனிருத்தும் பிரிந்துவிட்டனர். அனிருத் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து ஒருகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் மாறினார்.

அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைக்க துவங்கினார். அதேபோல் ஹிந்திக்கு சென்று ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு இசையமைத்தார். தெலுங்குக்கு போய் ஜூனியர் என்.டி.ஆரின் படத்திற்கு இசையமைத்தார். இதனால் இந்திய அளவில் அனிருத் பிரபலமானார்.

இந்நிலையில்தான் படத்தின் பட்ஜெட்டையும் தயாரிப்பு நிறுவனத்தையும் பொறுத்து அனிருத் ரூ.20 முதல் 28 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது..

கோலிவுட்டில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் மட்டுமே அதிக சம்பளம் வாங்கிவந்தார். ஆனால் அனிருத் அவரை எப்போதோ ஓவர் டேக் செய்து விட்டார். பெரிய பட்ஜெட், பெரிய நடிகர் படம் என்றால் 28 கோடி வரை அனிருத் சம்பளம் கேட்கிறாராம், அனிருத் வாங்கும் சம்பளம் மற்ற இசையமைப்பாளர்களிடம் பொறாமையை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்