நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் பலரும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர்ஹில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை ஒடுக்க டெல்லி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. போராட்டம் வலுப்பெறவே தர்மேந்திர பிரதான் பதவி விலக இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் மீது டெல்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது. எனவே அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.. இல்லையென்றால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கரப்பான் பூச்சி ஜனதா தளம் அறிவித்தது. ஒருபக்கம் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘குற்ற பின்னணி இல்லாத மாணவர்களின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை டெல்லி மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதேநேரம், குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

