சினிமா

ஜனநாயகனை தொடந்து Toxic ரிலீஸிலும் பஞ்சாயத்தா? ..

தற்போது இந்திய சினிமா உலகில் முக்கியமான கார்ப்பரேட் நிறுவனமாக மாறியிருக்கிறது கே.வி.என் புரடெக்‌ஷன். ஏற்கனவே சில படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படம் ஜனநாயகன் ஆனால் அந்த படம் கடந்த ஆறு மாதங்களாக வெளியாகாமல் கடந்த 23ம் தேதிதான் வெளியானது.

இந்த படத்தை வெளியிடுவதற்குள் கேவி.என் நிறுவனம் படாதபாடு பட்டுவிட்டது. ஒருபக்கம் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. ஒருபக்கம் முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆகிவிட்டது. அப்படி வெளியான ஜனநாயகன் திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கூட தொடவில்லை என்கிறார்கள்.

ஒருபக்கம் KGF பட ஹீரோ யாஷை வைத்து கே.வி.என் புரடெக்‌ஷன் தயாரித்துள்ள திரைப்படம் Toxic. கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பேன் இண்டியா படமாக டாக்சிக் வெளியாகவுள்ளது. இந்த படம் தங்களுக்கு அதிக வசூலை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் கே.வி.என் நிறுவனம் இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி படம் ரிலீஸ் ஆன அறிவித்துவிட்டு அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ஆனால் தற்போது வரை படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகள் விற்கப்படவில்லை. ஏற்கனவே இதனால்தான் 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அது நடக்கவில்லை.

எனவே ஆகஸ்ட் 26ம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் பட ரிலீசில் படாத பாடுபட்ட கே.வி.என் நிறுவனம் தற்போது டாக்சிக் படத்திலும் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்