சினிமா

எனக்கா எண்ட் கார்ட் போடுறீங்க!.. ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் கமல்..

கமலுக்கு விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து வெளியான தக் லைப் படம் ஹிட் படமாக அமையவில்லை. அதன்பின் வெளியான கல்கி 2898டி திரைப்படம் ஒரு பேன் இண்டியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அந்தப் படத்திலும் கமல் ஒரு முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், தக் லைப்புக்கு பின் கமல் ஹீரோவாக நடித்த படம் இதுவரை வெளியாகவில்லை.

சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு – அறிவு இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம் வீர தீர சூரன் படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்திலும் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான் விரைவில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறதாம். ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.

தக் லைப் தோல்விக்கு பின் கமல் பற்றிய செய்திகளில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான், அவர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்