இந்தியா

இனிமே இளைய கலைஞர்!.. உதயநிதியை முன்னிருத்தும் திமுக!..

திமுகவை பொறுத்தவரை கலைஞர் கருணாநிதிக்கு பின் அவரின் மகன் மு.க.ஸ்டாலின் இருந்தார். அதேநேரம், கலைஞர் உயிரோடு இருந்தவரை ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியோ, திமுக தலைவர் பதவியோ கொடுக்கப்படவில்லை. திமுக எம்.எல்.ஏ, திமுக இளைஞரணி தலைவர், சென்னை மேயர், துணை முதல்வர் போன்ற பதவிகளில் மட்டுமே ஸ்டாலின் இருந்தார். கலைஞரின் மறைவுக்கு பின் திமுக தலைவராக ஸ்டாலின் மாறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதால் முக ஸ்டாலின் முதலமைச்சராக மாறினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றுப்போனது. தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. அதோடு, சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்தார். அதேநேரம், அவரின் மகன் உதயநிதி திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்றதால் அவர் தற்போது எதிர்கட்சி தலைவராகிவிட்டார். முக ஸ்டாலின் தோற்றுப்போனதால் அவரால் சட்டமன்றத்திற்கு கூட வரமுடியவில்லை.

ஸ்டாலின் வயது காரணமாகவும், அரசியல் எதிர்காலம் விஜய் Vs உதயநிதி என மாறும் என்பதாலும் திமுகவில் உதயநிதியை முன்னிருத்த முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவினர் இனிமேல் உதயநிதியை ‘இளைய கலைஞர்’ என அழைக்கவேண்டும் என உத்தரவுகள் பிறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் கட்சி தொடர்பான முக்கிய விஷயங்களை எல்லோரும் உதயநிதியிடமே ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அனேகமாக, கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் அதிகரிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்