இந்தியா

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில்தான் டாஸ்மாக் கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது.

இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து அந்த QR கோடை டாஸ்மாக் கடைகளில் காட்டி மதுபானங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டத்திற்கு பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் என்பது அவரக்ளின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளிளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ‘வீடு தேடி மதுபானம் வரும் என சொல்வது தவறு.. ஆன்லைன் மூலம் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்.. அதுவும் பரிசோதனையில்தான் இருக்கிறது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதை தடுப்பதற்காகவும், அனைத்து வகையான மதுபானங்களும் கிடைக்கவே இந்த ஏற்பாடு’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்