சினிமா

ஆட்சி மாறிடிச்சி!.. ரெட் ஜெயண்டுக்கு பயப்படமாட்டோம்!.. DC-க்கு வந்த சிக்கல்!..

மாநகரம், விக்ரம், மாஸ்டர், கைதி, லியோ, கூலி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் டிசி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படமாக டிசி உருவாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 7ம் தேதியான நாளை இந்த படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில்தான் இந்த படத்திற்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தாலும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்கிறது.

ஆனால் லாபத்தில் மிகவும் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே தியேட்டர்களுக்கு கொடுப்பதாக இந்த நிறுவனம் சொன்னதால் சேலத்தில் அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் இந்த படத்தை திரையிட மாட்டோம் என கூறிவிட்டார்களாம். அதேபோல் மதுரையில் இரண்டு தியேட்டர்களை தவிர மற்ற தியேட்டர்களில் இந்த படம் வெளியாகாது என்கிறார்கள்.

திமுக ஆட்சியில் இருந்தவரை ரெட்ஜெயண்ட் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் தற்போது அதை எதிர்க்க துணிந்து விட்டதையே இது காட்டுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்