குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் தற்போது வரை அஜித்தின் புதிய படம் துவங்கப்படவில்லை. அதேநேரம் இந்த படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்பட்டது. இந்த படத்தில் நடிக்க அஜித் ரூ.185 கோடி சம்பளம் கேட்டதால் அவரை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
பார்த்து பார்த்து பொறுமையிழந்த அஜித் ஒரு கட்டத்தில் தானே இந்த படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் போகும் இந்த படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இது தொடர்பான டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், டேர் டெவில் திரைப்படத்தின் ப்ரீ பிசினஸ் (ரிலீஸுக்கு முந்தைய) வியாபாரத்தின் மதிப்பு ரூ.175 கோடி முதல் 185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதில் தமிழ்நாடு தியேட்டர் உரிமை ரூ.60 கோடி மற்றும் சேட்டிலைட் ரூ.30 கோடி, ஓடிடி ரூ.40 வரை போகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

