உலகம்

கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி!.. ஒவ்வொன்னுக்கும் ஒரு அமௌண்ட்!..

பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படும் ஒன்றுதான் இந்த கிசுகிசு. ஏனெனில் நமக்கு தெரிந்த ஒருவர் பற்றிய ரசிகசியங்களை பேசுவது என்பது எல்லோருக்கும் அலாதியான ஒன்றுதான். அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அது உண்மைதான் போல என பலரும் சொல்லி சந்தோஷப்படுவார்கள். ஆனால் உண்மை வேறாகவும் இருக்கலாம்.

நாமெல்லாம் கிசுகிசு என்றால் அதைப்பற்றி பேசுவதோ இல்லை அதை கேட்பதோடு நின்றுவிடுவோம். ஆனால் கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுசுக்கள் அதாவது மற்றவர்களின் ரகசியங்களையும் அருகில் வசிப்பவர்களிடம் கேட்டு பெறுவார்.

அதன்பின் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். அதன்பின் சம்மந்தப்பட்டவரிடம் அதை சொல்லி அதை வெளியில் சொல்லாமல் இருக்க கிசுகிசுவுக்கு ஏற்ற மாதிரி பணம் வசூலித்து வந்திருக்கிறார். இதில், கள்ளக்காதல் விவகாரம் என்றால் அதற்கு அதிக தொகையை வசூலித்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இரண்டு வீடுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். சிலர் அவருக்கு 7 லட்சம் வரை கூட பணம் கொடுத்திருக்கிறார்களாம். சமீபத்தில் மிர்யம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த