இந்தியா

விஜய்யால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு கமல் ஆதரவு.. இது தொடர வேண்டும் என விருப்பம்..

பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் முதல்வர் விஜயால் முன்மொழியப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது மற்றும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்த போக்கு தொடர வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்