சினிமா

இப்படிதான் காட்டுவாங்களா?!. கர்நாடகாவை விட்டு விரட்டுவோம்!. டாக்சிக் யாஷை திட்டிய நடிகை!…

கே.ஜி. எப் திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷ். கேஜிஎப் 2 படத்திற்கு பின் கீத்து மோகந்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது.

இந்த படத்தில் நயன்தாரா, ருக்மணி வஸந்த், கியாரா அத்வானி, டாரா சுடாரியா, ஹுமா குரோஷி என பல நடிகைகள் நடித்திருக்கிறார்கள். டிரைலரில் பல நடிகைகளுடன் யாஷ் நெருக்கமாக இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கன்னட நடிகை ரிஷிகா சிங் ‘டிரெய்லரை பார்த்தேன்.. பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளனர். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எதற்காக கியாரா அத்வானியை பாலிவுட்டிலிருந்து கூட்டி வந்தார்கள் என தெரியவில்லை.. பெண்கள் மதிக்கப்படவில்லை என்றால் இவர்களை கர்நாடகாவில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்