இந்தியா

5 முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரென நிறுத்திய ஏர்டெல்.. இனி குறைந்த விலையில் தினசரி டேட்டா கிடையாதா?

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்கும் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களையும் அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளது.

ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய ஐந்து பிரபல ப்ரீபெய்ட் திட்டங்களே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குறைந்த விலையில் டேட்டா பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இனி அதிக விலை கொண்ட திட்டங்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மிகவும் பிரபலமான ரூ. 299 திட்டத்தை நாடியவர்கள் இனி ரூ. 349 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிறுவனத்தின் சராசரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலையில் வரம்பற்ற டேட்டா வழங்குவது ஆரோக்கியமான வணிக முறை அல்ல என்றும், சந்தையில் சரியான கட்டமைப்பு முறை அவசியம் என்றும் ஏர்டெல் நிர்வாகம் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஏர்டெல்லின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதே போன்ற விலை உயர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்