சினிமா

12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் டாக்ஸிக்?.. பரபர அப்டேட்!..

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட நடிகர் யஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். கடந்த 2 வருடங்களுக்கும் மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் யஷ் நடித்திருக்கிறார்.

மேலும், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரோஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

டாக்ஸிக் திரைப்படம் வருகிற 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சுமார் 12 ஆயிரம் தியேட்டர்களில் டாக்ஸிக் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஏ சான்றிதழ் பெற்றுள்ள டாக்ஸிக் திரைப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடியது. டாக்ஸிக் திரைப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்