நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் ரேஷன் கார்ட்டை காட்டுவதோடு, கை ரேகை வைத்துதான் பொருட்களை வாங்குகிறார்கள். ரேஷனில் அரசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தாதான், நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டும்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் எந்த கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல், நியாயவிலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் Soft Copy மொபைல் போனில் இருந்தாலே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்’ என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்திருக்கிறார்.

