இந்தியா

மீண்டும் போராட்டம் வெடிக்கும்!.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை….

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக இளைஞர் அபிஜித் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்டதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டுமென டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், இளைஞர்களும் போரட்டம் நடத்தினர்.

இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலனாது. டெல்லி போலீசார் எவ்வளவோ அடக்குமுறைகளை செய்து போராட்டத்தை ஒடுக்கமுடியவில்லை. எனவே, தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.

அதேநேரம், போராட்டத்தில் பங்கு பெற்ற மாணவர்கள் மீதான வழக்குகளை பதிவு ரத்துசெய்யவேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வருகிறார்கள். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும் இன்னமும் அதை செய்யவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே ‘கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தவறினால் மீண்டும் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடிக்கும். மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய, அது குறித்த விவரங்களை பலமுறை உச்ச நீதிமன்றம் கேட்டும் அரசு கொடுக்க மறுப்பது இளைஞர்களுக்கு செய்யும் துரோகம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை கூட்டத்தை கூட்டி முடிவு செய்யவிருக்கிறோம்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்