சினிமா

அனிருத்தால் அப்செட்டான வெற்றிமாறன்!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அரசன்.. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் பல காரணங்களால் அவ்வப்போது தடைப்பட்டது. இடையில் இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதாகவும் கூட செய்தி வெளியானது. ஒரு பக்கம் கென் கருணாஸை வைத்து ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கிவருகிறார். அரசன் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்..

இந்நிலையில்தான் அனிருத் வேலை செய்யும் ஸ்டைலில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லை என செய்திகள் கசிந்திருக்கிறது. ஜெயிலர் 2 உள்ளிட்ட நிறைய படங்களை கையில் வைத்திருப்பதாலும், விரைவில் அவரின் திருமணம் நடைபெறவிருப்பதால் அந்த படங்களில் கவனம் செலுத்துவதாலும் அரசனை அவர் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், அப்செட்டான வெற்றிமாறன் தனது நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பியதாகவும், இசையமைப்பாளரை மாற்றி விடலாமா என்று கூட அவர் யோசித்ததாகவும் சொல்லப்படுகிறது

அதேநேரம், சமீபத்தில் படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் அனிருத்துக்கு போட்டு காட்டப்பட்டிருக்கிறது. அதைப்பார்த்து அசந்து போன அனிருத் உடனடியாக வெற்றிமாறனுக்கு போன் போட்டு ‘சார் நீங்க எந்த கவலையும் படாதீங்க.. இந்த படத்துக்கு என்ன தேவையோ அதை நான் செய்து கொடுக்கிறேன்.. உங்களுக்கு எப்போது எந்த மாதிரியான பாடல் வேண்டும் என்று சொல்லுங்கள்.. நான் போட்டு கொடுக்கிறேன்’ என அவரே ஆர்வமாகிவிட்டாராம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்