சினிமா

நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றம்!

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய நயன்தாரா பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறியதோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். அதேநேரம், தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால், யஷ் நடிப்பில் உருவாகி வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ள டாக்சிக் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார். அந்த மேடையில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்பது என் நோக்கமில்லை. எனக்கு அது சரியாக வராது’ என கூறியிருந்தார்.

அதேபோல், நயன்தாரா தயாரித்து கவினுடன் இணைந்து நடித்துள்ள ஹாய் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டு வருகிறார். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வருவதாக சொல்லியிருக்கிறாராம்.

நயன்தாராவிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் திரையுலகில் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்