பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வழக்கமான போட்டி முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய அணுகுமுறையுடன் தொடங்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த முறை போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியாது என்பதுதான் முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.
மூன்று போட்டியாளர்கள் வீதம் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் அதிக வாக்குகளைப் பெறும் இருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியும். குறைந்த வாக்குகளைப் பெறும் ஒருவர், வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பை இழந்து, மேடையிலேயே வெளியேற்றப்படுகிறார்.
இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் வீட்டுக்குள் சென்ற பிறகு போட்டியாளர்களை வெளியேற்ற மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் சீசன் 10ல், வீட்டுக்குள் யார் செல்ல வேண்டும் என்பதற்கே ஆரம்பத்திலேயே மக்கள் வாக்களிக்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த முறையில் மொத்தம் 19 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். போட்டியாளர்களின் பெயர்கள் பின்வருமாறு:
19 போட்டியாளர்கள்
லஷ்மி பிரியா
சாதிகா
பிருத்வி
ஜாவித்
அஸ்மிதா
முத்தழகி
அவினாஷ்
ஷாமா
ஜேசன்
முனியம்மாள்
பிளாக் பாண்டி
வினோத் பாபு
சாந்தினி தமிழரசன்
ஸ்வானிகா
குமரன்
ராகவ்
தன்யா
முகேஷ்
அடாவடி அன்சர்

