இந்தியா

உதயநிதியை வச்சி அரசியல் செய்ய முடியாது.. சொன்னது கே.என்.நேரு!.. துரை வைகோ போட்டி…

கடந்த பல தேர்தல்களில் வைகோவின் மதிமுக திமுக கூட்டணியில் இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பின் அந்த கட்சி தவெகவை ஆதரிக்க தொடங்கிவிட்டது. அதோடு தவெக கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோவும் அறிவித்துவிட்டார்.

இது திமுகவை கோபப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ‘துரை வைகோ என்னிடம் ‘என் தந்தை வைகோ மிகவும் கோபக்காரர்.. அவரால் இந்த கட்சியை நடத்த முடியாது.. நான் திமுகவில் சேர்ந்து கொள்கிறேன்’ என என்னிடம் கூறினார்’ என கூறியிருந்தார்..

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ ‘உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என சொன்னவர் கே.என்.நேரு. கலைஞர் காலத்தோடு அரசியல் முடிஞ்சு போச்சு.. இந்த பையனை வைத்தெல்லாம் அரசியல் செய்ய முடியாது என்று அவர் கூறினார்.. இதுதான் அவர்.. இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை..

கூட்டணியிலிருந்த போது திமுக என்னை அவதூறாக பேசியது.. சிறுமைப்படுத்துவது.. பண்ணையார் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது.. தனிமனித தாக்குதலுக்கு பயப்படக்கூடிய நபர் நானில்லை.. யாரும் என்னை மிரட்ட முடியாது.. எனக்கும் நிறைய விஷயங்கள் தெரியும்.. அனைத்தையும் பேச வேண்டியிருக்கும்’ என கூறியிருக்கிறார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்