தமிழ் சினிமாவின் சாட்டை, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், மகாமுனி, அய்யங்கரன், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் மகிமா நம்பியார்.
வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த மண்டாடி திரைப்படத்தில் கதாநாயகியாக இவர்தான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் மதிமாறன் ‘மண்டாடி படத்தில் ‘உசுரே நீதான்’ பாடல் ஷூட்டிங்கிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மகிமாவுக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு முகத்தில் 20 தையல் போடப்பட்டு அவரின் முகமே மாறிடுச்சு.. அதை எனக்கு செல்பி எடுத்து அனுப்பினாங்க.. அந்த நேரத்திலும் நான் சூட்டிங் வர முடியுமா? என்று கேட்டதும் சர்ஜரி முடிந்து ஆறு நாட்களில் வந்துட்டாங்க.. அந்த பாட்டுக்கு பின்னால் மகிமாவின் பெரிய உழைப்பு இருக்கு.. மறக்கவே மாட்டே’ன் என நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

