இந்தியாவில் சில பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல கடைகளிலும் போலீசாருக்கு தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டு அந்த போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு பக்கம் பான் மசாலா விளம்பரத்தில் பாலிவுட் நடிகர்கள் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பார்க்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
உணவு பாதுகாப்பு துறை அனுப்பிய நோட்டீஸுக்கு நடிகர்கள் அஜய் தேவகன், டைகர் ஷெராப் ஆகியோர் பதிலளித்துவிட்ட நிலையில் ஷாருக்கான் மட்டும் பதில் அளிக்கவில்லை. எனவே அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா உணவு மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டே ‘பெரிய நடிகர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் சட்டத்தை மீறியவர்கள்.. அவர்கள் மீது நடவடிக்கை பாயும்’ என தெரிவித்திருக்கிறார்.

