சினிமா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு 2வது குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இவர்களுக்கு ‘துவா’ என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு தீபிகா படுகோன் இரண்டாவது முறையாகக் கருவுற்று இருப்பதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தனர். கர்ப்ப பரிசோதனை கருவியை தங்களது மூத்த மகள் துவா கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் பதிவிட்டிருந்தது இணையத்தில் பெரிதும் வைரலானது.

தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இன்ப செய்தி அறிந்த இந்தியா முழுவதுமுள்ள திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்தி ஒருபுறம் இருக்க, ரன்வீர் சிங் ‘துரந்தர் 2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மறுபுறம், நடிகை தீபிகா படுகோன் இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ராக்கா’ என்ற புதிய படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்