அகில இந்திய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு செப்டம்பர் 28 முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி செப்டம்பர் 28 முதல் 30 வரை ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நாட்களில் எங்குள்ள ஏடிஎம் மையங்களிலிருந்தும் கட்டணமின்றி பணம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலைநிறுத்த காலத்தில் வாடிக்கையாளர்கள் தடையின்றி வங்கி சேவைகளைப் பெற யோனோ (YONO), இணைய வங்கி, மொபைல் வங்கி, வாட்ஸ்அப் வங்கி மற்றும் யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பொதுத்துறை மற்றும் மண்டல ஊரக வங்கிகளும் வழக்கம்போல இயங்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

