இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைச் சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலவும் தீவிரமான வானிலைச் செயல்பாடுகள் காரணமாக, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் பொதுவாகவே வெள்ளம் ஏற்படும் சூழல் நிலவும் என்பதைச் சுட்டிக்காட்டிய அந்த அதிகாரி, தற்போதைய கணிப்புகள் இம்மாதங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதையே காட்டுவதாகக் கூறினார்.

மழையின் தீவிரத்தைப் பொறுத்து, ஏற்படக்கூடிய வெள்ளச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காலமாக வறட்சியான வானிலை நிலவிய பகுதிகளில், செப்டம்பர் 28-29 திகதி முதற்கொண்டு ஒக்டோபர் மாதம் வரையிலும் மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை உருவாகக்கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அடுத்தகட்ட வானிலை நிலவரப்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும், குறிப்பிட்ட சில கடலோரப் பகுதிகளில் அலைகள் சுமார் இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடலோரப் பகுதி மக்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்