கனடா

கனடா தலைநகரில் உள்ள டிரம்ப் வீதிக்கு விரைவில் புதிய பெயர்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள குடியிருப்பு வீதியான ‘டிரம்ப் அவென்யூ’ என்ற வீதியின் பெயரை மாற்றுவதற்கு அந்நகர சபை செப்டம்பர் 23 அன்று ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரைத் தாங்கி நின்ற இந்த வீதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று ரிவர் வார்டு கவுன்சிலர் ரிலே ப்ரோக்கிங்டன் செப்டம்பர் 9 அன்று தீர்மானம் கொண்டு வந்தார்.

ஒட்டாவாவின் சென்ட்ரல் பார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் மேடிசன் பார்க், மேன்ஹாட்டன் கிரசண்ட், ஸ்டேட்டன் ஸ்ட்ரீட் போன்ற நியூயார்க் நகர அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றம் செய்ய நிர்வாக உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வீதிக்கு புதிய பெயரைத் தேர்ந்தெடுக்க உள்ளூர் மக்களிடம் பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் பரிந்துரைக்கும் பெயரை நகர சபை இறுதி செய்யும் என்றும் கவுன்சிலர் ப்ரோக்கிங்டன் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு