உலகம்

நேபாள பேரழிவு.. 37 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்.. பெரும் ஆச்சரியம்..

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி மாயமான மலேசிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், 37 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளார்.

சீன வம்சாவளியைச் சேர்ந்த அந்த நபர், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இருந்தபோது, ஆகஸ்ட் 26-இல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கினார். வெள்ளத்தின் காரணமாக சாலைகளும் பாலங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் இணைச் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இதனால் அவரால வெளியுலகை தொடர்புகொள்ள முடியாமல் போனது.

தனித்து விடப்பட்ட அந்த நபர், அனைத்து சவால்களையும் கடந்து கடந்த வியாழக்கிழமை காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தைத் தாமாகவே தொடர்புகொண்டார். அதை தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை மலேசியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தத் தகவலை தொடர்ந்து, நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியர்களின் எண்ணிக்கை 55-லிருந்து 54-ஆக குறைந்துள்ளது. 37 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் வியப்பையும் ஆறுதலையும் அளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த