விளையாட்டு

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி, ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அவர் ஒரு அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக ஹேமங் பதானி தலைமை தாங்கிய பயிற்சி பிரிவுக்குப் பதிலாக தற்போது கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.

“இனிமேல் பார்வையாளராக மட்டும் நின்று வழிகாட்டும் காலம் முடிந்தது; களத்தில் இறங்கி நேரடியாக செயல்பட தயாராகிவிட்டேன்” என்று கூறி டெல்லி கேப்பிடல்ஸ் வெளியிட்ட வீடியோவில் கங்குலி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். டெல்லி அணி உரிமையாளர்களான பார்த்திவ் ஜிந்தால் மற்றும் கிரண் குமார் கிராந்தி ஆகியோர் கங்குலியின் வருகை அணிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்றும், முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கங்குலிக்கு உறுதுணையாக யுவராஜ் சிங் (பேட்டிங் பயிற்சியாளர்), சாமிந்தா வாஸ் (வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்), மற்றும் அமித் மிஸ்ரா (சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்) உள்ளிட்ட நட்சத்திப் பயிற்சியாளர் குழு அமைக்கப்பட உள்ளது. கேப்டன் அக்சர் படேல் தலைமையில், புதிய பயிற்சியாளர் குழுவுடன் டெல்லி கேப்பிடல்ஸ் களம் காண உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்