சினிமா

Dorothy OTT Release Date: கார்த்திக் சுப்புராஜின் டோரதி .. OTT ரிலீஸ் தேதி இதுதான்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் . அவரது படைப்புகள் வெளியாகும்போதெல்லாம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் கிடைப்பது வழக்கம். குறிப்பாக சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிற்து.

அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் டோரதி கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் டோரதி படத்திற்கு கலவையான கருத்துகள் கிடைத்தன. இருப்பினும், படத்தின் உருவாக்கம், கதை சொல்லப்பட்ட விதம் உள்ளிட்ட அம்சங்களுக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகளும் கிடைத்தன.

இந்த நிலையில், திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது டோரதி OTT ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது. பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி டோரதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

பல படங்கள் திரையரங்குக்ளை வ்பிட ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் அந்த வகையில் திரையரங்குகளில் கலவையான வரவேற்பைப் பெற்ற டோரதி திரைப்படத்திற்கு நெட்ஃப்ளிக்ஸ் வெளியீட்டுக்குப் பிறகு எப்படியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்