உலகம்

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!…

இந்த வருடமும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். நான் நிறைய போர்களை நிறுத்தியிருக்கிறேன்.. ஆனால் எனக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என கடந்த வருடமே அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் நவி பிள்ளைக்கு நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நியுயார்க்கின் சைராகுஸ் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப் ‘ஜனநாயகத்திற்கு எதிரானவர்களால் அமைதிக்கான நோபல் பரிசு நிரந்தரமாக தனது மதிப்பை இழந்துவிட்டது.

இந்தியா – பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.. ஒரு நோபல் பரிசுக்கு பதிலாக 8 நோபல் பரிசு எனக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. உலக அமைதிக்காக போராடிய என்னை விட்டுவிட்டு ஐநாவில் பணியாற்றிய யாருக்குமே தெரியாத இஸ்ரேலை வெறுக்கும் நபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது’ என ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த