சினிமா

மீண்டும் தியேட்டருக்கு வரும் 96

காலங்கள் மாறினாலும் சில திரைக்கதைகள் விட்டுச்சென்ற தாக்கம் பார்வையாளர்களின் மனதை விட்டு அவ்வளவு எளிதில் மறைந்துவிடுவதில்லை. அந்த வரிசையில், தமிழ் சினிமா கண்ட மிக மென்மையான, ஆழமான காதல் படங்களில் ஒன்று 96. ரசிகர்களை மீண்டும் நெகிழ வைக்க எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைக்குத் திரும்புகிறது.

இயக்குநர் பிரேம்குமார் எழுத்து இயக்கத்தில் 2018-ல் வெளிவந்த இத்திரைப்படம், பள்ளிக்காலத்து ஈர்ப்பு, காலத்தால் பிரிக்கப்பட்ட நினைவுகள், பல ஆண்டுகள் கழித்து நிகழும் ஒரு மாலை நேர சந்திப்பு என்ற எளிமையான அதே சமயம் உணர்வுகளுடன் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. பள்ளித் தோழர்களின் மறுசந்திப்பு நிகழ்வில் சந்திக்கும் ராமும் ஜானுவும், தங்களுக்குள் எஞ்சியிருக்கும் மௌனங்களையும் சொல்லப்படாத உணர்வுகளையும் இயல்பாகப் பகிர்ந்துகொள்ளும் சில மணி நேரப் பயணமே இப்படத்தின் ஆன்மா. எந்தவித சினிமாத்தனமான நாடகத்தனமும் இல்லாமல், ஒரு மெல்லிய ஏக்கத்தை அப்பட்டமாகத் திரையில் கடத்தியதே இப்படம் 8 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பேசப்படுகிறது.

ராமாக விஜய் சேதுபதியும், ஜானுவாகத் திரிஷாவும் மிகவும் அற்புதம்மாக நடித்திருப்பார்கள். ராம் – ஜானு என்ற இரு பெயர்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் மாறாத இடம்பிடித்ததற்கு இருவரின் அசாத்திய நடிப்பே முதன்மையான காரணம். அதேபோல் பள்ளிப் பருவக் காட்சிகளில் தோன்றிய இளம் ஜோடியான ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் 96 படம் நாளை மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்