2023ம் வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்ற நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க ஜெயிலர் 2 படம் உருவானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரிய அளவு புரமோஷன் செய்யப்படவில்லை. படத்திற்கு இசை வெளியீட்டு விழா கூட நடக்கவில்லை. அதேநேரம் ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்கிற பெயரில் ஒரு அரங்கில் படக்குழு சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகி,ரி நாமக்கல், ஓசூர் போன்ற ஊர்களில் உள்ள 42 Multiplex தியேட்டர்களில் ஜெயிலர் 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது தியேட்டர் அதிபர்கள் வழக்கத்திற்கு மாறான கூடுதல் பங்கு கேட்பதாகவும் அதை வினிநியோகஸ்தர்கள் ஏற்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள 42 Multiplex தியேட்டர்களில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

