சினிமா

விஜய் தேவரகொண்டா மேனேஜர் போலீசில் புகார்.. யார் மீது? என்ன காரணம்? ராஷ்மிகாவின் ரியாக்சன் என்ன?

தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர்கள் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்துள்ளன. நிகழ்ச்சியில் தங்களது திருமணம் மற்றும் காதல் குறித்து அவர்கள் பேசிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு, இணையத்தில் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவை “ரெட் ஃபிளாக்” என சித்தரித்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களின் மேலாளர் பி. நிஷாந்த் குமார் ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

போலியான ஸ்கிரீன்ஷாட்கள், தவறான தகவல்கள் மற்றும் நபர்களை போல் நடித்து போலியாக உருவாக்கப்பட்ட பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் கோரப்பட்டுள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யை ஆயிரம் முறை வேண்டுமானாலும் தேர்வு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல விஜய் தேவரகொண்டாவும் தங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாச் சென்று கொண்டிருப்பதாகவும், விமர்சிப்பவர்கள் தங்களது கருத்துக்களை தங்களுடனேயே வைத்துக்கொள்ளலாம் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்