கனடா

புத்தாண்டு இரவை முன்னிட்டு TTC மற்றும் GO சேவைகளில் பயணம் முற்றிலும் இலவசம்

இந்த விடுமுறைக் காலத்தில் ரொரன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளான TTC, GO Transit மற்றும் UP Express ஆகியவற்றில் பயணிக்கத் திட்டமிட்டால், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைகள் மற்றும் சேவைகள் குறித்த விபரங்கள் இதோ.

முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 31ஆம் திகதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ஆம் திகதி காலை 8 மணி வரை TTC, GO Transit மற்றும் UP Express சேவைகளில் பயணம் செய்வது முற்றிலும் இலவசம் என Metrolinx அறிவித்துள்ளது.

இந்த இலவச நேரத்திலும் பயணிகள் தமது PRESTO அட்டையை வழமைபோல் தொட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ஆனால் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

மேலும், புத்தாண்டு இரவில் யூனியன் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் சேவைகள் வழமையை விட அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

Lakeshore West, Lakeshore East, Kitchener போன்ற பல வழித்தடங்களில் அதிகாலை வரை ரயில்கள் இயக்கப்படும். TTC சேவைகளும் வழமையை விடப் பிந்தி இயக்கப்படும்.

விடுமுறைக்கால அட்டவணையைப் பொறுத்தவரை, டிசம்பர் 20 முதல் சில GO பேருந்து வழித்தடங்கள், குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ், பொக்சிங் டே மற்றும் புத்தாண்டு தினங்களில் GO Transit சனிக்கிழமை அட்டவணையின்படி இயங்கும். TTC சேவைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கும்.

அதேவேளை பொக்சிங் டே அன்று காலை 6 மணிக்குத் தொடங்கினாலும், ஞாயிற்றுக்கிழமை சேவை அட்டவணையின்படியே இயங்கும். பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடும் முன் சமீபத்திய அட்டவணைகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு