முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சிற்க்கு பாரப்படுத்தி நடவடிக்கைக்கு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.
பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன அவர்கள் மேற்கண்ட முறைப்பாட்டை அடுத்து கடந்த 12ஆம் திகதி கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார்.
குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பியமை போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

