கனடா

கார்களை மோதி தப்ப முயன்ற கும்பல்!

Ontario-வின் Vaughan பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு துணிகரமான திருட்டு முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kipling Avenue மற்றும் Highway 7 சந்திப்பில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் Break-and-Enter நடப்பதாக York Regional Police அதிகாரிகளுக்கு அதிகாலை 2 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், சந்தேக நபர்கள் ஒரு திருடப்பட்ட வாகனத்தில் தப்பிக்க முயல்வதை கண்டனர்.

அவர்களை தடுக்க போலீசார் நான்கு வாகனங்களை கொண்டு Boxing-in முறையில் சுற்றி வளைத்தனர். ஆனால், கொள்ளையர்கள் தப்பிக்க முடிவு செய்து போலீஸ் வாகனங்கள் மீது ஆவேசமாக மோதினர். இதில் நான்கு Police Cruisers பலத்த சேதமடைந்தன, அதில் இரண்டு வாகனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இருப்பினும், தப்பியோட முயன்ற மூன்று சந்தேக நபர்களையும் போலீசார் துரத்திச் சென்று வெற்றிகரமாக மடக்கி பிடித்தனர். ஒரு சந்தேக நபர் ஓடி தப்ப முயன்றபோது அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் சோதனையிட்டபோது ஒரு Loaded Firearm கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து York பிராந்தியPolice தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கனடா

சுவீடன் மன்னர் கனடா விஜயம்

சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன்
கனடா

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம்

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு