ஆரோக்கியம்

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!

ஆண்களுக்கு தொப்பை மற்றும் சொட்டை இரண்டுமே தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.. பல ஆண்களும் அதை விரும்புவதில்லை. அதில் சொட்டையை தடுக்க முடியாவிட்டாலும் தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை குறைக்க சுலபமான சில வழிகளை பார்க்கலாம்:

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் அதிக அளவில் சேரும்போது அது உடலின் வயிற்றுப் பகுதியில் தங்கிவிடும்.. அதைத்தான் தொப்பை என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. இப்படி உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து தொப்பையாக மாறுவது உடம்பில் பல பிரச்சனைகளையும் உருவாக்கும்.

இரவு உணவில் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும்.. ஒன்று குறைவாக சாப்பிடுவது.. மற்றொன்று அதிக நேரம் தவிர்த்து சாப்பிடுவது.. அதாவது, இரவு உணவை முடிந்த வரை ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு 9:00 மணிக்கு தூங்க செல்லலாம்.. இரவு உணவுக்கு தூங்குவதற்கும் இடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருந்தால் அது நல்லது.. அதேபோல், பரோட்டோ போன்ற கடினமான உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இரவு உணவுக்கு பின் காலாற சிறிது தூரம் நடை பயிற்சி செய்யலாம். ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்ய முடியாது என்றால் வீட்டிலேயே சில எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம்.. போன் பேசும் போது நடப்பது, எங்கேனும் சென்றால் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்துவது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

தூக்கத்துக்கும் தொப்பைக்கும் தொடர்பு உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. அதேபோல் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.. தூங்கும் நேரம் குறைந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும். குறிப்பாக இரவில் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு நார்ச்சத்து, இரும்பு சத்து, புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.. அதேபோல் சமையலில் ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான்.

நிறைய தண்ணீர் குடிப்பது, சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, டீ, காபியை குறைப்பது, உணவில் உப்பை குறைப்பது ஆகியவவை நல்ல பலன்களை கொடுக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆரோக்கியம்

உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள்!

மனித உடலானது பல்வேறு பணிகளை செய்து நமது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறது. இந்த உடலை இயக்குவதற்கு பல்வேறு உடல் பாகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த உடல்
ஆரோக்கியம்

கர்ப்பிணி பெண்களுக்கு கால் வலி வராமல் இருக்க..! இந்த வகை காலணிகளை ட்ரை பண்ணி பாருங்க..!

வெப்பமான காலங்களில் நமது கால்கள் அதிக வறட்சியடையும். பொதுவாக கர்ப்ப காலத்தில் நடப்பது அதிக சோர்வை ஏற்படுத்தும். இதற்கு நடுவே இந்த கால் வறட்சி மேலும் சோர்வை