விளையாட்டு

உலகக்கோப்பை டி20.. SA vs AFG.. சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள்.. 2வது சூப்பர் ஓவரில் நடந்த அதிசயம்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியும் துல்லியமாக 187 ரன்கள் எடுக்க, ஆட்டம் ‘டை’ ஆனது.
வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனால் நடத்தப்பட்ட 2-வது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக 23 ரன்களை குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 2-வது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்