ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்து சில நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கி வருகிறது. அதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது.. ஏனெனில், வளைகுடா நாடுகளிலிருந்து ஈரானில் ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் கொண்டு வரப்படுகிறது.
ஆனால் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டதால் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் எண்ணெய் கப்பல்கள் வந்து சேரவில்லை.. இதன் காரணமாக இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வணிக சிலிண்டர் கிடைக்காத காரணத்தால் ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது.. ஒருபக்கம், தட்டுப்பாடு காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் அவசர கையறுப்பில் இருக்கும் 17.2 கோடி பேரல் எண்ணையை விடுவிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
அமெரிக்கா மொத்தமாக 71 கோடி பேரல் கச்சா எண்ணையை சேமிக்க முடியும்.. தற்போது 41 கோடி பேரல் அமெரிக்காவின் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

