விளையாட்டு

நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்துவிடும்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை இழந்த பாகிஸ்தான் புலம்பல்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து புதிய சரிவை சந்தித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா 106 ரன்கள் குவித்து போராடியும், கடைசி ஓவரில் ஷாஹீன் அப்ரிடி ஸ்டம்பிங் செய்யப்பட்டதால் அந்த அணியின் வெற்றி கனவு கலைந்தது.

இந்த தோல்வி முன்னாள் வீரர் கம்ரான் அக்மலைக் கொதிப்படைய செய்துள்ளது. “இப்போதைய நிலையில் நெதர்லாந்து கூட நம்மை தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்து பெற நினைக்கும்” என அவர் சாடியுள்ளார்.

மேலும், ஆசிய கோப்பை விவகாரத்தில் பிசிபி தலைவர் மோசின் நக்வியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆறு அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தஸ்கின் அகமதுவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வங்கதேச வீரர் தன்சித் ஹசன் சதம் அடித்து அந்த அணியின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.

டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டு வர நினைத்த பாகிஸ்தானுக்கு இந்த தொடர் இழப்பு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்