இந்தியா

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்.. நாளை வரை கெடு?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளை விட குறைவாக ஒதுக்க திமுக முன்வந்துள்ளதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 6 இடங்களுக்கு குறைவாக போட்டியிட முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் அதிகரிக்கப்பட்டதும், புதிய வரவான தேமுதிகவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் இடதுசாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்தும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று இரவு நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படாவிட்டால், நாளை கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்