இந்தியா

எரிபொருள் தட்டுப்பாடு!.. வாட்டர் கேன் விலை உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி!

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் கிடைக்காததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கச்சா எண்ணெய் கிடைக்காததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது. அப்படியே ஓட்டல்கள் திறக்கப்பட்டிருந்தாலும் உணவு வகைகளின் விலை உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்னீர் கேனின் விலை தற்போது உயர்ந்திருக்கிறது. 20 லிட்டர் மினரல் குடிநீர் கேன் 5 ரூபாயும், ஒரு லிட்டர் மினரல் குடிநீரின் பாட்டிலின் விலையில் 3 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.

மூலப் பொருட்களின் விலை, வேலை ஆட்களின் சம்பளம், மின்சார கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் எல்லா மாநிலங்களிலும் பொதுமக்கள் சமையலுக்கும், குடிப்பதற்கும் வாட்டர் கேன் நீரை பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த விலை உயர்வு அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்