உலகம்

முதல் நாடு!.. எரிபொருள் தட்டுப்பாடு!.. எமர்ஜென்ஸியை அறிவித்த பிலிப்பைன்ஸ்!

அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேல் இந்த போர் நீடித்து வருகிறது.

ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு ராணுவ தளங்களை அமைத்துக்கொள்ள இடம் கொடுத்த வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், அபுதாபி, லெபனான் போன்ற நாடுகளின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த வளைகுடா நாடுகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.. குறிப்பாக பல எண்ணெய் கிணறுகள் பற்றி எரிகிறது.

இதன்காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டிருக்கிறது. அதோடு அதோடு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல் தடமான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதையடுத்து பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சமையல் சிலிண்டர் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்நிலையில்தான், முதல் நாடாக ஈரான் போர் பாதிப்பை சுட்டிக்காட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் எமர்ஜென்சி (அவசரநிலை) அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் 98 சதவீதம் கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாங்குவதால் இந்த பிரச்சனையை அந்நாடு சந்தித்துள்ளது. பிலிப்பைன்ஸில் பெட்ரோல் டீசல் விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. இந்நிலையில்தான், அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோச் அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த