இந்தியா

இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க!.. பிரச்சாரத்தில் செங்கோடையனுக்கு டங் ஸ்லிப் ஆயிடுச்சே!

அதிமுகவில் பல வருடங்கள் பயணித்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்றவர். பலமுறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர். எம்ஜிஆர் அதிமுக துவங்கிய போதிலிருந்தே அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதா காலத்திலும் முக்கிய அமைச்சராக செங்கோட்டையன் இருந்தார்.. ஜெயலலிதா மறைந்த போது அடுத்த முதலமைச்சர் யார் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் சசிகலாவின் உதவியால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி விட அந்த வாய்ப்பு செங்கோட்டையனுக்கு கிடைக்கவில்லை. ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியால் விலக்கி வைக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டை பேசத் தொடங்கியதால் அவரை கட்சியிலிருந்து தூக்கினார் பழனிச்சாமி. இதையடுத்து செங்கோட்டையன் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈரோட்டில் தவெகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.. உடனே சுதாரித்த செங்கோட்டையன் ‘இரட்டை இலை’ என்று சொல்லி பழகிவிட்டேன் என சமாளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்