பாலிவுட் பட இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்சய் கண்ணா, அர்ஜுன் ரெம்பல், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் துரந்தர். இந்திய ராணுவத்திற்காக உளவாளி வேலை பார்க்கும் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார்.
பாகிஸ்தானுக்கு சென்று பிச்சைககாரன் வேடத்தில் அவர் உளவாளியாக இருக்கிறார் அதன்பின் நாட்டு நலனுக்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை
. பக்கா ஆக்சன் காட்சிகளோடு உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தை வட மாநில ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2025ம் வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 1350 கோடி வரை வசூல் செய்தது.
அதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் Dhurandhar 2 The Revenge என்கிற தலைப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி உலகெங்கும் வெளியானது. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தற்போது வரை 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது. பாகுபலி 2, புஷ்பா 2 ஆகிய இரு படங்களின் வசூல் சாதனையையும் துரந்தர் 2 முறியடித்துவிட்டது.
துரந்தர் மற்றும் துரந்தர் 2 இரு பாகங்களும் சேர்த்து 3 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இது இந்திய சினிமாவில் புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

