இந்தியா

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளி திறக்கப்படும் தேதி என்ன?

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டு தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இன்றுடன் முழு ஆண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ப்பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நீர்நிலைகளான கடல், ஆறு, ஏரி மற்றும் குளங்களுக்கு சென்று குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மாணவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

வெளிப்புற விளையாட்டுகளின் போது போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

தேர்தல் பணிகள் மற்றும் கோடை வெப்பம் ஆகியவற்றை முன்னிட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்