உலகம்

கணவருடன் சண்டை!. கட்டுகட்டா பணத்தை சாலையில் வீசிய பெண்..

கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபப்பட்ட ஒரு பெண் தான் வசிக்கும் வீட்டு மாடியிலிருந்து கட்டு கட்டாக பணத்தை சாலையில் வீசி எறிந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சாந்தூ நகரில் வசிக்கும் ஒரு பெண் தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட கோபத்தில்தான் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை கீழே வீசி எறிந்தார்.

அவர் வீசி எரிந்த பணத்தின் மதிப்பு 10 லட்சம் முதல் 20 லட்சம் ஹாங்காங் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.5 முதல் 2 கோடி வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மேலே இருந்து பண நோட்டுகள் மழை போல கீழே விழுந்ததால் நடைபாதையில் சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் பணத்தை எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதன்பின் காவல்துறை அங்கு வந்து பொதுமக்களிடமிருந்து பணத்தை மீட்டனர். பணத்தை திருப்பிக் கொடுக்காதவர்கள் காவல்துறையிடம் பணத்தை ஒப்படைக்குமாறு வேண்டுகோளும் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு மனநல ஆலோசனையும் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.. இது தொடர்பான வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த