இந்தியா

நாளை 6 மணிக்கு மேல்!. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பிரிப்பது, பிரச்சாரம் செய்து போன்ற வேலைகளில் மும்முரம் காட்ட தொடங்கியது.

வழக்கமாக அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவும். ஆனால், தற்பொது விஜயின் தவெகவும் இந்த போட்டியில் இணைந்திருப்பதால் நான்குமுனை போட்டி நிலவுகிறது..

கடந்த பல நாட்களாகவே திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பல இடங்களுக்கும் இந்த பிரச்சாரம் செய்தார்கள.

இந்நிலையில்தான் நாளையோடு பிரச்சாரம் முடிவடைவதால் நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. மேலும், டிஜிட்டல் முறையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதோடு, வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும், பிரச்சார வாகனுங்களுக்கான அனுமதி நாளை மாலையிடும் ரத்து செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்