இந்தியா

தமிழகத்தை விட அதிக வாக்குப்பதிவு.. ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்கிறார்களா மேற்குவங்க வாக்காளர்கள்?

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், முதற்கட்டமாக வடக்கு வங்காளத்தின் 152 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மதியம் 2:55 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 62.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழகத்தில் பதிவானதை விட அதிகம் ஆகும்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சியை தக்கவைக்க போராடும் நிலையில், பாஜக முதல்முறையாக ஆட்சியை பிடிக்கத் தீவிரமாக உள்ளது.

வாக்குப்பதிவின் போது முர்ஷிதாபாத் பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது அப்பகுதியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் பாதுகாப்பிற்காக இந்திய தேர்தல் ஆணையம் சுமார் 2,450 கம்பெனி மத்திய படைகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், 8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டுள்ளது.

சுமார் 3.60 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தகுதியுள்ள இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு அலை மற்றும் ஊடுருவல் போன்ற விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்