விண்வெளியில் இருக்கும் பல கிரகங்களில் பூமியும் ஒன்று. பூமியில்தான் மனிதர்கள் வசித்து வருகிறார்கள். பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்க கூடிய கிரகங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடிவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விண்ணில் பூமியை போலவே பல நூறு கிரகங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் சென்று மனிதனால் ஆராய்ச்சி செய்ய முடிவதில்லை.. சமீபத்தில்தான் நிலவின் பின்புறத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்தனர். விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை.
இந்நிலையில் இனிமேல் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என நாசா விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். அதாவது ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நடக்கும் போது பூமியின் சுழலும் மேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகிச் செல்வதும்தான் இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் மேகம் குறைவதால் 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கிறார்கள், பூமி தோன்றிய காலத்தில் ஒருநாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் டைனோசர் காலத்தில் அது 23 நேரமாக மாறியதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 25 மணி நேரமாக மாற இன்னும் இரண்டு கோடி வருடங்கள் இருப்பதால் இப்போது நாம் அதை பற்றி யோசிக்க தேவையில்லை!.

